states

img

உத்தரபிரதேசத்தில் பிப்.15 வரை பள்ளிகள் மூடல்  

உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பிப்ரவரி 15 ஆம் தேதிவரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  ஜனவரி 30 ஆம் தேதிவரை மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த உத்தரவு 4 நாள்களில் முடிவடையவுள்ள நிலையில், மேலும் பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 30 முதல் பிப்ரவரி 15 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும். வரவிருக்கும் பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர்(உள்துறை) அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.  

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,937 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. மொத்தம் 80,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  லக்னோவில் மட்டும் புதன்கிழமை 2,096 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

;